உலகின் சோகமான சங்கதி எது? குழந்தை கட்டிய மணல் வீடு சரிந்து போவதா, பாசப் பறவையை பருந்து பறித்துச் செல்வதா, செல்ல நாய்க்குட்டியை எமன் எடுத்துச் செல்வதா? இருக்கலாம், இவையெல்லாவற்றைவிட சோகமானது முடியில்லாத கரடியைக் காண்பது.
ஆமாங்க. கரடிக்கு அழகே அதன் புசுபுசு முடிதான். அது வெள்ளையோ கருப்போ முடி இல்லாத கரடியை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால், பார்க்க வைத்துவிட்டது இயற்கை.
ஜெர்மனி லீப்ஸிக் நகரத்தில் உள்ள லீபிங் வனவிலங்கு காட்சியகத்தில் இருந்த கரடி ஒன்றுக்கு திடீரென முடி கொட்டத் துவங்கியது. என்ன காரணம் என்று காரணம் கண்டுபிடிக்கும் முன்பாகவே அங்கிருந்த அனைத்து கரடிகளின் முடியும் கொட்டிவிட்டன. இதைப் பார்க்கும் பொதுமக்கள் அனைவரும் பரிதாபப்பட்டு ‘உச்’ கொட்டி விட்டுப் போகிறார்கள்.
கரடிகளுக்கு ஒவ்வாத ஏதோ ஒன்று தான் இந்தக் கொடிய காரியத்தை செய்திருக்கவேண்டும் என்று அனுமானித்த நிபுணர்கள் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வனவிலங்கு காப்பகம் இரண்டு நூற்றாண்டுகளை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கரடிகளுக்கு எப்படியாவது முடியை திருப்பி வரவழைங்கப்பா புண்ணியாப் போகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக