தந்தை குரங்கிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்ற தாய் குரங்கு ஒரிசா காவல்நிலையத்தில் மனு கொடுத்துள்ளது. ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆண் குரங்கு இந்த குட்டியை கொன்று விடாமல் தடுக்க தாய் குரங்கு எப்போதும் தன் குட்டியை தன் மடியிலேயே வைத்துள்ளது. அதை சுற்றி மற்ற குரங்குகள் பாதுகாப்பாக நிற்கின்றன. இருந்தும் ஆண் குரங்கு குட்டியை கொல்லும் நோக்கத்துடன் அடிக்கடி தாக்கி வருகிறது. அதை மற்ற குரங்குகள் சண்டையிட்டு விரட்டி வருகின்றன. இதை பார்த்த ஊர் பொதுமக்களும் ஆண் குரங்கை விரட்டி அடித்து வருகின்றனர். ஆனாலும் ஆண் குரங்கு குட்டி குரங்கை குறிவைத்து சுற்றி சுற்றி வருகிறது. இதனால் பொதுமக்கள் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். தாய் குரங்கு நேரடியாக புகார் கொடுப்பது போல ஒரியா மொழியில் மனு ஒன்றை தயாரித்தனர். அதன் கீழ் கைரேகைக்கு பதில் குரங்கின் வால்பகுதியை மையில் நனைத்து பதிவு செய்தனர். அதை போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். தாய் குரங்குக்கு சிமியன் என்றும், ஆண் குரங்குக்கு ராஜா என்றும், குட்டி குரங்குக்கு குணா என்றும் மக்கள் பெயரிட்டு இருந்தனர். சிமியன் கொடுத்துள்ள புகாரில், என் குழந்தையை எனது கணவர் ராஜா கொல்ல முயற்சித்து வருகிறார். அவரிடம் இருந்து என் குழந்தையை பாதுகாக்க வேண்டும். கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தந்தை குரங்கு ராஜா மீது இந்தியன் பீனல் கோர்ட் 307 (கொலை முயற்சி), 363 (கடத்தல்), 366 (அடிமைப்படுத்த கடத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் போலீசார் என்ன செய்துவிட முடியும். குட்டியை காப்பாற்றும் விதத்தில் பொதுமக்களே தடியுடன் ஆண் குரங்கை கண்காணித்து வருகின்றனர்.
!-end>!-local>
About me
Archive
-
▼
2010
(16)
-
▼
பிப்ரவரி
(12)
- விண்வெளி ஓடம் -டிஸ்கவரி விண்ணோடம்
- உலகின் சோகமான சங்கதி! (World’s saddest thing!)
- நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்
- அமெரிக்காவில் பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம்
- உலகின் மிகப்பெரிய மாடுகள்
- உலகின் மிகப்பெரிய 10 நாய்கள்
- CRICINFO
- CRICINFO SCORES
- என்.எச்.47 என் பாதை
- இலங்கையில் பாம்புகள் பற்றிய ஆராய்ச்சி தற்போது அதிக...
- தலைப்பு இல்லை
- கட்டபொம்மன் காடு
-
▼
பிப்ரவரி
(12)
Text

About Me

- sivasri
- இலங்கை திருநாட்டின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் என்ற ஊரில்,இருபதாவது வயதில் நாட்டுசூழல் என்னை வவுனியாவுக்கு விரட்டிவிட்டது, உயர்தரம் வரை அங்குதான்,பின்னர் நாட்டு சூழலோடு சேர்ந்து வீட்டு சூழலும் என்னை பல்பொருள் வாணிப உரிமையாளராக்கி அழகு பார்த்தது!!!! பின் வாழ்க்கை எனும் மாய கண்ணாடியில் என் பிம்பமும் பட வேண்டும் என்பதற்காக எனக்கான ஒரு அடையாளத்தை தேடிகொண்டிருக்கிறேன்.சிறுவயதிலேயே வாழ்க்கையோடு போராட கற்றுகொண்டவன் நான்! அம்மாவை ஆழமாகவும்,உறவுகளையும் நட்பையும் மானசீகமாகவும் காதல் செய்தவன் நான். என்னை உத்தமன் என்றும் சொல்லமாட்டேன்....வாலிப வயதுக்குரிய எல்லா அட்டூளியங்களயும் செய்தும் இருக்கிறேன்.மனதில் பல ஆசைகள்,கனவுகள்,இலட்சியங்களை சுமந்து கொண்டு நீண்ட ஒரு வாழ்க்கைக்காக(லண்டன் மோகத்தால்) விமானத்தில் கால் பதித்தேன்.ஒன்றரை வருடம் இந்தியா சாப்பிட்டது பின் வந்த அரை வருடம் SINGAPORE + MALAYSIA பகிர்ந்து கொண்டது.மீண்டும் 2009 ஆண்டு கால் பதித்தேன் என் திருநாட்டில்-தொழில்தேடி அலைந்து திரிந்த எனக்கு கை கொடுத்தது ஓர் தனியார் வங்கி.ஏதோ வாழ்கை உருண்டோடுகிறது.தேடலோடு கடந்து போன பழைய நினைவுகள் நினைக்கையில்- உங்களோடு சிறியவனாய் நான்...............!!!!
பின்பற்றுபவர்கள்
©2008. All rights Reserved நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக