பாம்புகள் பற்றி மக்கள் மத்தியில் அதிகம் அச்சம் நிலவுகின்றது. அதனால் தான் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள்.இலங்கை இயற்கையிலேயே அதிகமான உயிரியல் வளங்களையும், பௌதீக வளங்களையும் நிரம்பப் பெற்ற நாடாகும். இலங்கையில் 98 வகைப் பாம்பினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 35 இனங்கள் விஷம் கொண்டவை.இந்த விஷம் கொண்ட பாம்பினங்களில் 20 இனங்கள் கொடூர விஷத்தை கொண்டுள்ள பாம்பினங்களாக இனங் காணப்பட்டுள்ளது. அவற்றில் 7 இனங்கள் தரையில் வாழ்வனவாகும். ஏனைய 13 இனங்கள் கடலில் வாழ்வனவாகவும் உள்ளன. இவை கொடூர விஷம் கொண்டவை எனினும் இன்று வரை இவற்றால் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என பாம்புகளின் ஆராய்ச்சியில் ஈடுபடும் கெலும் மனமேந்திர ஆராச்சி தெரிவித்தார். தற்போது பாம்புகள் பற்றி பரவலான ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றது. கெலும் மனமேந்திர ஆராச்சி தலைமையில் வைத்தியர் கலன மா துவகே(பேராதனை வைத்தியசாலை), வைத்தியர் அஞ்சன சில்வா(கம்பளை வைத்தியசாலை), வைத்தியர் மாதவ மிகஸ்கும்புர ஆகியோர் வடமத்திய மாகாணத்தில் பாம்புகளின் ஆராய்ச்சியில் ஈடுபடும் விசேட ஆராய்ச்சியாளர்கள் ஆவர்.பாம்புகளினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளையும் இவர்கள் நடத்திவருகின்றனர்.இந்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சு நிதி வசதிகளினை வழங்கி வருகின்றது.பாம்பு தீண்டப்பட்ட ஒருவருக்கு உடனடி சிகிச்சைக்;கு உண்தமான சுதேச மருத்துவ முறைமையை கையாளுவதற்கு இந்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி யுடாக அறிவுறைகள் புகட்டப்படுன்றது. இலங்கையில் 98 இனங்கள் கொண்ட பாம்புகளில் 50 சதவீதமானவை இலங்கையில் மட்டும் காணப்படுவதாகவும் உலகத்திலேயே சுமார் 3000 பாம்பு வர்க்கங்கள் உள்ளதாகவும் இவ் ஆராய்ச்சியாளர்களின் தகவல்படி அறியவந்தள்ளது. கொடூர விஷத்தைக் கொண்ட தரையில் வாழும் 7 பாம்பினங்களாவன பவளப் பாம்பு,நாகம், கண்ணாடி விரியன்,வெள்ளை விரியன் ,கோப்பி விரியன், சுருட்டைப் பாம்பு , எட்டடி விரியன. பவளப் பாம்பு என்ற பாம்பினம் மண் புழுவைவிட ஓரளவுக்கு பெரிதாகும். அதனால் அதற்கு மனிதர்களைத் தாக்கும் ஆற்றல் இல்லை இப் பாம்புகள் மனிதர்களுக்கு அபாயங்கள் ஏற்பட்டதாக இதுவரை அறியக் கிடைக்கவில்லை. நாகம், கண்ணாடி விரியன், கோப்பி விரியன் ஆகிய பாம்பினங்களில் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. அதேவேளை சுருட்டைப் பாம்பு, எட்டடி விரியன் என்பன தீண்டிய நிகழ்வுகள் மிக அரிதாகவே அறியக் கிடக்கின்றன. இந்தக் கடல் வாழ் பாம்பினங்கள் 13 உம் பெரும்பாலும் கடற்கரையையொட்டிய ஆழமற்ற கடலில் காணப்படுவதில்லை. அதனால் இந்த பாம்புகள் மனிதர்களைத் தீண்டிய நிகழ்வுகள் மிகக் குறைவாகவே அறியக் கிடைத்துள்ளன. வருடாந்தம் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் பாம்புக் கடிக்கு இலக்காகின்றனர் என வைத்தியசாலை தரவுகளும் ஏனைய தரவுகளும் சுட்டிக்காட்டிய போதிலும் 500க்கும் 1000 க்கும் அதிகமானவர்கள் இந்த பாம்புக் கடிக்கு இலக்காகுவதாக கெலும்; மனமேந்திர ஆராச்சி தெரிவிக்கின்றார். பாம்புக் கடிக்கு இலக்காகின்றவர்கள் பலர் அவசர சுதேச மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று பின்பு இறுதிதருவாயில் வைத்தியசாலையை நாடுகின்றனர்;. இந்த சமயங்களில் பாம்புக்கடிக்குட்பட்டவர்கள் மரணத்தை தழுவக்கூடிய வாய்ப்பும் ஏற்படுகின்றது. பாம்பு தீண்டப்பட்டவர்கள் அசமந்த போக்காக இருந்து சிகிச்சை பெற தவறின் நீண்ட இடவெளிக்கு பின் அவர்களுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கக்கூடும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை நாடு பூராகவுள்ள வைத்திய சாலைகளில் 30,000- 40,000 க்கும் இடைப்பட்ட தொகையினர் பாம்புக்கடிக்குட்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.பாம்புகள் செறிந்து காணப்படும் வடமத்திய மாகாணத்திலேயே பாம்புகள் தீண்டப்படுவது அதிகமாக திகழ்கின்றது. 200 வருடங்களுக்கு முன்னர் இருந்தே வட மத்திய மாகாணம் விவசாயத்திற்கு பெரும் பங்கை வகித்து வந்தது. இங்கு அரிசி மற்றும் தானியங்களின்; உற்பத்தி பெருக எலிகளின் ராட்சியமும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் எலி பிரியர்களின் பாம்புகள் இப்பிரதேசத்தினை தமது இருப்பிடமாக்கிக்கொண்டன. அறுவடைகாலங்களிலேயே பாம்பு தீண்டுதல் சம்பவங்கள் இவ் மாகாணத்தில் அதிகரித்து காணப்படும்;. தெற்காசியாவிலே பாம்பு தீண்டுதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை அதன் 2ஆவது இடத்தை பிடித்துவிட்டதாக கெலும் மனமேந்திர தெரிவிக்கின்றார்.
இலங்கையில் பாம்புகள் பற்றிய ஆராய்ச்சி தற்போது அதிகரித்து வருகின்றது
இடுகையிட்டது sivasri on புதன், 24 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக